பதின்ம வயதுடைய இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றையும், கட்டொழுங்கையும் விதைக்க வகை செய்யும் தேசிய சேவைத் திட்டம் மறுபடியும் நாட்டில் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்புத் தொடர்பான நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இளையோர்கள் மத்தியில் தேசப்பற்றை விதைப்பது மூலம் நாட்டின் பாதுகாப்பின் அவசியம் குறித்து ஒவ்வொரு குடிமகனும் அறிந்து கொண்டு, அதில் தமது ஈடுபாட்டையும், பங்களிப்பையும் காட்டுவதற்கு தேசிய சேவைத் திட்டம், முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று மக்களவை சபா நாயகர் ஜோஹரி அப்துல் வலியுறுத்தினார்.
தற்காப்பு அமைச்சின் வாயிலான அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய சேவைத்திட்டத்தை மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்தி அதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்வதற்குரிய பரிந்துரைகள் முன்வைக்கப்படும் என்று ஜோஹரி அப்துல் குறிப்பிட்டார்.








