சட்டவிரோத பணம் மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெர்லிஸ் மாநில முன்னாள் மந்திரி புசார் அஸ்லான் மான் , இரண்டாவது முறையாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி அஸூரா அல்வி முன்னிலையில் நிறுத்தப்பட்ட அஸ்லான் மான், பத்து லட்சத்து 60 ஆயிரம் வெள்ளியைச் சட்டவிரோதமாக பெற்றதாக அவருக்கு எதிராக 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டிற்கும் 2017 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் உள்ள வங்கிகளில் அஸ்லான் மான் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 15 ஆண்டு சிறை மற்றும் 5 மடங்கு அபராதம் விதிக்க வகை செய்யும் 2001 ஆம் ஆண்டு சட்டவிரோத பண மாற்றம் சட்டத்தின் கீழ் அஸ்லான் மான் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் தனக்கு எதிரான ஐந்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அஸ்லான் மான் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 50 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அஸூரா அல்வி அனுமதி அளித்தார்.

Related News

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு

உறவினர் வெறிச்செயல்: 5 வயது சிறுமி ஆற்றில் வீசப்பட்டு உயிரிழப்பு

கூச்சிங்கில் 24 மணி நேர கடைகள் மீது பட்டாசு வீசி தாக்குதல்

சிறை வாழ்க்கை பணம், செல்வாக்கை பொறுத்ததா? - பாடகர் யாசின் சுலைமான் கருத்துக்கு சிறைத்துறை மறுப்பு


