Oct 16, 2026
Thisaigal NewsYouTube

அந்தப் பயணத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்தப் பயணத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை

டிச.3-


நாட்டின் வியூக முதலீட்டு நிறுவனமான 1எம்டிபிகடந்த 2009 ஆம் ஆண்டு தென் பிரான்சுக்கு தாங்கள் மேற்கொண்ட கப்பல் பயணமானது, குடும்பத்தினருடன் விடுமுறையை உல்லாசமாக கழிக்கும் பயணமே தவிர அந்தப் பயணத்தில் எந்தவொரு உள்நோக்கமும் இல்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்தப் பயணத்தில் தமது மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், பிள்ளைகளான Nor Ashman Razak, Nooryana Najwa மற்றும் Riza Aziz ஆகியோருடன் தங்கள் நண்பரான Tan Sri Bustari Yusuf-பும் கலந்து கொண்டனர் என்று நஜீப் தெளிவுபடுத்தினார்.

அதேவேளையில் 1MDB நிதி முறைகேடு தொடர்பில் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் ஜோ லோ, தங்கள் பயணத்தில் பங்கு கொள்ளவில்லை என்று நஜீப் திட்டவட்டமாக தெரிவித்தார்.

1MDB- தொடர்புடைய 2.27 பில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக நஜீப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள 4 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கில் அந்த முன்னாள் பிரதமர், இன்று இரண்டாவது நாளாக தமது தற்காப்பு வாதத்தில் மேற்கண்டவாறு சாட்சியம் அளித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →