Dec 2, 2025
Thisaigal NewsYouTube
4 அந்நிய நாட்டு கப்பல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

4 அந்நிய நாட்டு கப்பல்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன

Share:

கிழக்கு ஜொகூர் கடற்பரப்பில் அனுமதியின்றி நங்கூரமிட்ட குற்றத்திற்காக நான்கு அந்நிய நாட்டுக் கப்பல்களை தஞ்சோங் செடிலி, மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர்.

கடந்த மே 13 ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்திற்கு மேற்கொள்ளப்பட்ட ஓப் ஜங்கார் ஹராம் எனும் அதிரடி சோதனையில் அந்நான்கு கப்பல்களும் பிடிப்பட்டதாக அதன் இயக்குநர் முகமட் நஜீப் சாம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் இருந்து பதிவு செய்யப்பட்ட எல்.பி.ஜி. ரக கப்பல் மற்றும் ஒரு டேங்கர், இந்தோனேசியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு கப்பல் மற்றும் மொன்ரோவியாவில் இருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு போக்குவரத்து கப்பல் ஆகியவை மலேசியா கடல்சார் அமலாக்க பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக முகமட் நஜீப் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட அந்த நான்கு கப்பல்களின் கேப்டன்களும் மலேசிய கடல் பகுதியில் கப்பல்களை நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கும் ஆவணங்களை சமர்பிக்கத் தவறியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News