Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைகிறது

Share:

ஜொகூர் பாரு,ஜன.12
ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,942 ஆக குறைவு கண்டுள்ளது. நேற்று இரவு 9 மணி வரையில் 5,022 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று குறைந்திருப்பது ஒரு நல்ல முன்னேற்றமாக கருதப்படுகிறது.

6 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 26 நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநில அரசாங்க செயலாளர் தான் ஶ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி தெரிவித்தார்.

கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் வெள்ளம் குறைந்து வருவதாகவும் இதுவரையில் கோத்தா திங்கியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,057 ஆக குறைந்திருப்பதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை குழு (JPBN) அறிவித்துள்ளது.

க்லுவாங்,மெர்சிங், பொந்தியான்,கூலாய், கோத்தா திங்கி, ஜொகூர் பாரு ஆகிய இடங்களில் நாளை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் கடும் மழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்