Apr 11, 2026
Thisaigal NewsYouTube
முதன்முறையாகத் தேசிய அளவிலான ‘ஆலயக் கருத்தரங்கு’: நிலச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை மஹிமா பேரவை வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

முதன்முறையாகத் தேசிய அளவிலான ‘ஆலயக் கருத்தரங்கு’: நிலச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை மஹிமா பேரவை வலியுறுத்தல்

Share:

நிலச் சட்டங்கள் மற்றும் நகரத் திட்டமிடல் குறித்த புரிதலை மேம்படுத்துவதன் மூலமே, அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்கள் மீண்டும் மீண்டும் உருவாவதைத் தவிர்க்க முடியும் என மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் வலியுறுத்தினார்.

இன்று பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலய மண்டபத்தில் கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத்தின் ஆதரவுடன் மஹிமா ஏற்பாட்டில் நடைபெற்ற நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களின் மேலாண்மை சட்ட அம்சங்கள் குறித்த விரிவான புரிதலை வழங்கும் கருத்தரங்கிற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோ சிவகுமார் இதனை தெரிவித்தார்.

நாட்டில் இத்தகையதொரு விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக வேறு எவரும் இத்தகைய முயற்சியை முன்னெடுக்கவில்லை. இந்தக் கூட்டத்திற்கு 5 பேர் வந்தாலும் சரி, 500 பேர் வந்தாலும் சரி, இந்த முக்கியமான செய்தியைச் சமூகத்திற்குக் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். ஏனெனில் இது மிகவும் அடிப்படையான மற்றும் அவசியமான புரிதலாகும்,” என்று சுமார் 700-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களிடையே உரையாற்றிய போது டத்தோ சிவகுமார் இதனை குறிப்பிட்டார்.

அங்கீகாரம் இன்றி கட்டப்படும் பிற சமய வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களாக மாறுவதைச் சுட்டிக்காட்டிய டத்தோ சிவகுமார், நிலத்தின் அந்தஸ்து மற்றும் முறையான அனுமதி பெறும் நடைமுறைகளில் நிலவும் குழப்பங்களே இத்தகைய சிக்கல்களுக்குக் காரணமாகின்றன என்றார்.

“முறையான அனுமதியின்றி கட்டப்படும்போதுதான் பிரச்சினைகள் தொடங்குகின்றன. அதனைச் சரியான சட்ட வழிகளில் அணுகாவிட்டால் சிக்கல்கள் நீண்டு கொண்டே செல்லும். எனவே, வழிபாட்டுத் தலங்களை நிர்வகிப்பவர்கள் நிலச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.

மேலும் தேசிய நிலச்சட்டம் தொடர்பான நடைமுறைகள் குறித்த ஆழமான புரிதலை வழங்கக்கூடிய வழிகாட்டல் புத்தகம் ஒன்றும், நிகழ்வில் கலந்து கொண்ட 700 க்கும் மேற்பட்ட ஆலயப் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டதாக டத்தோ சிவகுமார் குறிப்பிட்டார்.

வெற்று விமர்சனங்களை முன்வைப்பவர்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த சிவகுமார், “வெளியில் பலர் சத்தமாகப் பேசுகிறார்கள், ஆனால் இது போன்ற கலந்துரையாடல் மற்றும் விவாத மேடைகள் அமைக்கப்படும்போது அவர்கள் முன்வருவதில்லை. இத்தகைய அணுகுமுறை பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தராது, மாறாக சமூகத்தில் தேவையற்ற கசப்புணர்வை மட்டுமே உருவாக்கும்,” என்றார்.

எனவே, அனைத்துத் தரப்பினரும் உணர்ச்சிவசப்படாமல், உண்மைகள் மற்றும் சட்டத்தின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் மூலம் தீர்வுகளைக் காண முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜாவினால் தொடக்கி வைக்கப்பட்ட இந்தக் கருத்தரங்கில் நிலச் சட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதோடு, பங்கேற்பாளர்களுக்கு நடைமுறை ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. குறிப்பாக, ஒருவருக்குச் சொந்தமான நிலம் சட்டப்பூர்வமாக இருக்கும் பட்சத்தில், அதனை வழிபாட்டுத் தலத்திற்காகப் பயன்படுத்துவதற்குப் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்துத் தெளிவுபடுத்தப்பட்டது. நகரத் திட்டமிடல் நிபுணர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு நில அனுமதி மற்றும் மேம்பாடு குறித்த சந்தேகங்களுக்குப் விளக்கமளித்தனர்.

இதனிடையே இந்த கருத்தரங்கு ஆலயப் பொறுப்பாளர்களுக்கு மிகுந்த பலனளிக்கத்தக்க வகையில் இருந்தது என்று கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆலயப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

Related News

உலகளாவிய எரிபொருள்  நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டுவசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியிலும் வீட்டுவசதித் திட்டங்கள் திட்டமிட்டபடி முடியும் - அமைச்சர் ஙா கோர் மிங் உறுதி

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

போலீஸ் தினத்தை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

எல்டிபி (LDP) நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதி விபத்து: மோட்டார் சைக்கிள் ஓட்டி பலத்த காயம்

பத்துகேவ்ஸ்  சிறார் இல்லத்தில்  பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

பத்துகேவ்ஸ் சிறார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமை: சட்ட அம்சங்களை ஆராய்கிறது மகளிர் அமைச்சு

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

சிங்கப்பூரில் கழிவறை சுத்தம் செய்ய 13,000 ரிங்கிட் சம்பளம்! - பட்டப்படிப்பு கட்டாயம் என்பதால் நெட்டிசன்கள் வியப்பு

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு

எரிபொருள் கடத்தலைத் தடுக்க எல்லையோர எரிபொருள் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு