Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் சவால்
தற்போதைய செய்திகள்

நஜிப்பின் நிபந்தனை மன்னிப்பை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் சவால்

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட இரண்டாவது நிபந்தனை மன்னிப்பு மற்றும் வீட்டுக்காவல் தொடர்பான மன்னிப்பு வாரியத்தின் முடிவை எதிர்த்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவர் ஆனந்த் ராஜ் கூறுகையில், முதல் மன்னிப்பு தொடர்பான தங்களது மேல்முறையீட்டையும் தொடர்ந்து முன்னெடுப்பதாகக் கூறினார்.

நஜிப் எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கில் எஞ்சிய சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வீட்டுக்காவலுக்கான முறையான சட்டக் கட்டமைப்பு தற்போது இல்லை என்றும், நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான நிபந்தனைகள், கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடைமுறைகள் முழுமையாக வெளியிடப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் மன்றம் கோரியுள்ளது.

Related News