Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்
தற்போதைய செய்திகள்

பேராசிரியர் சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் மறைவிற்கு அன்வார் இரங்கல்

Share:

அரச விருது பெற்ற பேராசிரியர் டான் ஸ்ரீ சையத் முஹம்மது நாகிப் அல்-அத்தாஸ் இன் மறைவுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், "நமது சகாப்தத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர்" என்று அவர் குறித்து விவரித்துள்ளார்.

மிகச் சிறந்த தத்துவஞானியான சையத் முஹம்மது நாகிப், நாம் என்ன கற்கிறோம் என்பதை மட்டுமல்ல; அறிவு என்பதே எதற்காக? என்று கேள்வி எழுப்பியவர் என்றும் அன்வார் விவரித்துள்ளார்.

‘Islam and Secularism’ மற்றும் “Prolegomena to the Metaphysics of Islam” உள்ளிட்ட அவரது மகத்தான படைப்புகள் மூலமாக அறிவின் மதச்சார்பற்ற நிலையை சிந்தனைக்கு உட்படுத்தினார்.

மேலும் இஸ்லாமிய உலகக் கண்ணோட்டத்தின் அறிவுசார் அடித்தளங்களையும் விளக்கமாக முன்வைத்தார்.

மலேசியா மட்டுமல்ல, உலகமே அவர் சொல்வதைக் கேட்டது என்று அன்வார் தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

ISTAC என்றழைக்கப்படும், சர்வதேச இஸ்லாமிய சிந்தனை மற்றும் நாகரிக நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான சையத் முஹம்மது நக்கீப், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.47 மணியளவில் காலமானார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு