சிரம்பான், செப்டம்பர்.23-
மைகாட்டில் சேதமுற்ற மென்பொருளை இலவசமாக மக்கள் மாற்றிக் கொள்ள முடியும் என்று அரசாங்கம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து முதல் நாளான இன்று நவம்பர் 23 ஆம் தேதி யுடிசி மையங்களில் உள்ள தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பக் காணப்படுகிறது.
சிரம்பான், அம்பாங்கான், யுடிசி மையத்தின் ஜேபிஎன் முகப்பிடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இன்று காலை முதல் மாலை 4 மணி வரை உள்ளூர் நாளேடு ஒன்று நடத்திய ஆய்வில் மக்கள் காத்திருக்கும் இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய வழக்கத்திற்கு மாறாக அனைத்து முகப்பிடங்களும் திறக்கப்பட்டுள்ளன.
விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் உதவித் தொகைக்கான பெட்ரோல் ரோன்95 எரிபொருளை வாங்குவதற்கு மைகாட்டில் உள்ள மென்பொருள் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அது சேதமுற்று இருக்குமானால், உதவித் தொகைக்குரிய பெட்ரோலை வாங்குவதில் சிரமம் ஏற்படலாம் என்று நினைவுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தங்கள் மைகாட்டின் செயல்பாட்டை தெரிந்து கொள்ள பலர் ஜேபிஎன் அலுவலகங்களில் குவிந்துள்ளனர்.








