கோத்தா பாரு, நவம்பர்.01-
கிளந்தானில் கடந்த சில மாதங்களாக ஆபாச வீடியோ பதிவுகளை உட்படுத்திய மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெட்கப்பட்டு புகார் கொடுக்க முன் வராமல் இருப்பதால் பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் போவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ முகமட் யூசோஃப் மாமாட் தெரிவித்தார்.
சந்தேக நபர்கள் தங்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான பாலியல் நடவடிக்கைகள் அல்லது உரையாடல்களைப் பதிவு செய்கின்றனர். பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் பணம் பறிக்க அப்பதிவுகளைப் பயன்படுத்துவதாக அவர் கூறினார்.
குறிப்பிட்ட சில சம்பவங்கள் விசாரிக்கப்படுகின்றன என்றாரவர்.








