கோலாலம்பூர், செராஸ் ஜெயா இடைநிலைப் பள்ளியின் கட்டடத் தொகுதியில், நேற்று மதியம் 12.40 மணியளவில் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று கல்வித் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஜனவரியில், பள்ளி கட்டடத் தொகுதி கூரையின் கட்டமைப்பில் ஏற்பட்ட பழுதினால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக நம்பப்படுகிறது.
இதனால், கட்டட சுவரில் ஒரு சிறு பகுதி இடிந்து விழுந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அக்கட்டடப் பகுதி உடனடியாக காலி செய்யப்பட்டதாக லிம் ஹுய் யிங் குறிப்பிட்டார்.
அந்தக் கட்டடப் பகுதி மாணவர் ஒன்றுக் கூடல் சபைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக துணை அமைச்சர் விளக்கினார்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!


