பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18-
இரு இணைய ஊடகங்களுக்கு எதிராக, இம்மாதம் 15ஆம் தேதி அனுப்பப்பட்டிருந்த வழக்கறிஞர் நோட்டிஸ்களை, மனிதவள மேம்பாட்டு கழகம் - HRD CORP மீட்டுக்கொண்டது.
HRD CORP கழகத்தின் நிதி, முறைகேடாக முதலீட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து, செய்தியை வெளியிட்டதற்காக, அக்கழகம் இதற்கு முன்பு, THE MALAYSIAN INSIGHT மற்றும் THE VIBES ஆகிய இணைய ஊடகங்களுக்கு நோட்டிஸ்களை அனுப்பியிருந்தது.
ஆயினும், தேசிய கணக்காய்வு தலைவரின் அறிக்கை மற்றும் தேசிய கணக்காய்வு குழுவின் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டிருந்த ஊடகங்களுக்கு எதிரான சட்டநடவடிக்கையை கைவிடும்படி, மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கேட்டுக்கொண்டதை அடுத்து, அந்த நோட்டிஸ்கள் மீட்டுக்கொள்ளப்பட்டன.








