கிளந்தான், கோத்தா பாருவில் கடை உரிமையாளரான முஸ்லிம் அல்லாத பெண், அரைக்கால் சிலுவார் அணிந்திருந்த காரணத்தினால் அவருக்கு அபராதம் விதித்த கோத்தா பாரு ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஙா கொர் மிங் தெரிவித்தார்.
அந்தப் பெண்ணுக்கு சம்மன் வழங்கப்பட்டது தொடர்பில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தினர். அந்த பெண்ணுக்கு கோத்தா பாரு நகராண்மைக்கழகம் விதித்த அபாரதத் தொகைக்கான சம்மனை ரத்து செய்வதென முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ஙா கொர் மிங் குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


