கோலாலம்பூர், செப்டம்பர்.23-
சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா உதவித் திட்டத்தில் ஒரு முறை வழங்கப்பட்ட 100 ரிங்கிட்டைப் பயன்படுத்தி, பொருட்களை வாங்கிய மக்களின் எண்ணிக்கை, கடந்த சனிக்கிழமை வரை 13 மில்லியன் பேரைத் தாண்டியுள்ளது என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் தெரிவித்தார்.
18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மலேசியர்களுக்கு வழங்கப்பட்ட இந்தச் சலுகையானது, அவரவர் தங்கள் மைகாட் அட்டையைப் பயன்படுத்தி, தேர்வு செய்யப்பட்ட வர்த்தகத் தளங்களில் 100 ரிங்கிட்டிற்கு உட்பட்ட 18 வகையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு வகை செய்கிறது.
100 ரிங்கிட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் அதில் பாக்கித் தொகையை வைத்து இருப்பவர்கள், ஆண்டு இறுதி வரையில் அந்த எஞ்சியத் தொகையை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அமைச்சர் அமீர் ஹம்ஸா தெளிவுபடுத்தினார்.








