May 5, 2026
Thisaigal NewsYouTube
புத்ரா ஹைட்ஸில் 10 வயது சிறுமி சித்ரவதை: மூன்று உறவினர்கள் கைது
தற்போதைய செய்திகள்

புத்ரா ஹைட்ஸில் 10 வயது சிறுமி சித்ரவதை: மூன்று உறவினர்கள் கைது

Share:

சுபாங் ஜெயா, பிப்ரவரி.04-

தனது 10 வயது மகளைக் குடும்ப உறுப்பினர்களே துன்புறுத்தியதாகத் தாயார் அளித்த புகாரைத் தொடர்ந்து, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இது குறித்து புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

புத்ரா ஹைட்ஸில் உள்ள ஒரு குடியிருப்பில் தனது மகள் அவரின் அத்தை ஒருவரால் தாக்கப்பட்டதாகத் அந்த மாது குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில், புகார்தாரரும் சந்தேக நபர்களும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.

இச்சம்பவத்தின் போது தடுத்த தன்னையும் அந்த உறவினர்கள் தாக்கியதாக அந்த மாது தெரிவித்துள்ளார். இப்புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கையில், 17 முதல் 49 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் விசாரணைக்காக வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்குப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என வான் அஸ்லான் தெரிவித்தார்.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்