May 22, 2026
Thisaigal NewsYouTube
மணமகனுக்கு 6 ஆயிரம் வெள்ளி அபராரம்
தற்போதைய செய்திகள்

மணமகனுக்கு 6 ஆயிரம் வெள்ளி அபராரம்

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 28 -

கைகலப்பின் போது ஆடவர் ஒருவரை மரக்கட்டையினால் சரமாரியாக அடித்து காயம் விளைவித்தாக விரைவில் திருமண மேடை ஏறவிருக்கும் ஓர் இந்திய இளைஞருக்கு ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 6 ஆயிரம் வெள்ளி அபராதம் விதித்தது.

36 வயது சுரேஷ் குமார் கோபிநாதன் என்ற அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் சுஹாய்லா ஷபிமுன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி மாலை 6.40 மணியளவில் பத்து பாஹாட், தாமான் சோகா,ஜால்ன் பினாங் ராஜா என்ற இடத்தில் கைகலப்பில் ஈடுபட்டதுடன் 32 வயது நபரை மரக்கட்டையை ஆயுதமாக பயன்படுத்தி சரமாரியாக அடித்து காயம் விளைவித்ததாக சுரேஷ் குமார் கோபி நாதனுக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது

Related News