Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வட கிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட முதலாவது மாநிலம் திரெங்கானு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வட கிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட முதலாவது மாநிலம் திரெங்கானு

கெமாமான், நவ.19- வெள்ளப் பேரிடருக்கு வழிவகுக்கும் வட கிழக்கு பருவமழை கடந்த வாரம் முற்பகுதியில் தொடங்கிய வேளையில் வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட முதலாவது மாநிலமாக திரெங்கானு விளங்குகிறது.

நேற்றிரவு பெய்த கனத்த மழையில் திரெங்கானு, கெமாமான் வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

திரெங்கானு மாநில வெள்ளப் பேரிடர் மேலாண்மை செயலகம் முதலாவது நிவாரண மையத்தை திறந்துள்ளது. அந்த செயலகத்தின் தகவலின்படி இதுவரையில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

திரெங்கானுவில் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வட கிழக்கு பருவமழையில் பாதிக்கப்பட்ட முதலாவது மாநிலம் திர... | Thisaigal News