கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி போஸ் டாகோ (Pos Dakoh) வழியாக வனப் பகுதிக்குள் சென்ற பின்னர் காணாமல் போன ஆறு பேரைத் தேடும் பணியில் 14 வனப்பகுதி மலை வழிகாட்டிகள் இணைந்துள்ளனர்.
பேராக் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வழிகாட்டிகளும், கிளந்தானைச் சேர்ந்த எட்டு வழிகாட்டிகளும் இன்று திங்கள்கிழமை, மூன்று நான்கு சக்கர வாகனங்களில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடைபெறும் பகுதிக்குள் சென்றனர்.
காணாமல் போன குழுவில் நான்கு குடும்ப உறுப்பினர்களும் இரு மலை வழிகாட்டிகளும் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இவர்களைத் தேடும் பணியில் இதுவரை புதிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குடும்பத்தினர் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், குழுவின் கடைசி இருப்பிடம் பேராக் மாநில வனப் பகுதியில் இருந்தது தெரிய வந்துள்ளது.
போஸ் டாகோ வழியாக நுழைந்த அக்குழுவினர், பேராக் மாநிலத்தில் உள்ள போஸ் கெமார் (Pos Kemar) வழியாக வெளியேறத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.








