எரிமலை சாம்பல் காரணமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து கோலாலம்பூருக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், மலேசியப் பயணிகள் மாற்று வழியில் நாடு திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
29 வயதான வான் நோர் ரிடானியின் குடும்பத்தினர், மாற்றுத் பயணம், தங்குமிடம் மற்றும் போக்குவரத்துக்காக கூடுதலாக 10,000 ரிங்கிட் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜகார்த்தாவில் இருந்து காரில் சுராபாயா சென்று, அங்கிருந்து ஜோகூரின் செனாய் நகருக்கு, விமானம் மூலம் பயணித்து, பின்னர் கோலாலம்பூர் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.
மவுண்ட் அனாக் கிராகத்தாவ் (Mount Anak Krakatau) எரிமலை வெடிப்பால் பரவிய சாம்பல் காரணமாக ஆறு விமான நிலையங்களில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.








