Oct 18, 2026
Thisaigal NewsYouTube

உடல் உழைப்புத்தொழிலாளிக்கு 74 ஆண்டு சிறை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உடல் உழைப்புத்தொழிலாளிக்கு 74 ஆண்டு சிறை

கோத்தா பாரு,செப்டம்பர் 12-

தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து, குழந்தை பிரசவிக்கும் அளவிற்கு வக்கிரத்துடன் நடந்து கொண்ட உடல் உழைப்புத் தொழிலாளி ஒருவருக்கு கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 72 ஆண்டு சிறை மற்றும் 60 பிரம்படித் தண்டனை விதித்தது.

46 வயதுடைய அந்த நபர், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சுல்கிஃப்லி அபிலா இத்தண்டனையை விதித்தார்.

அந்நபர், கடந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் கோலா க்ரை, மானெக் உறை -யில் உள்ள தனது வீட்டில் 15 வயது மகளிடம் இத்தகைய பாலியல் வன்கொடுமையை புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →