மலேசிய மக்கள் எதிர்நோக்கி வரும் வாழ்க்கைச் செலவின சுமையை குறைப்பதற்கு உதவும் வகையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கம் சிறப்பு நிதி ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார. இவ்விவகாரம் தொடர்பாக அமைச்சரவையில் தாம் விவாதித்து இருப்பதாக நிதி அமைச்சருமான பிரதமர் குறிப்பிட்டார்.
நிறுவனம் ஒன்று ஆண்டுக்கு 10 கோடி வெள்ளி நிகர ஆதாயத்தை ஈட்டினாலும் அதன் பலாபலன் தொழிலாளர்களுக்கு எட்டாமல், அவர்களின் சம்பளம் உயர்ததப்படாமல், அதே நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு இந்த சிறப்பு நிதியை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம் கொண்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
நேற்ற இரவு, சிலாங்கூர்,பெஸ்தாரி ஜெயா, பசார் மலாம் வளாகத்தில் ஜெலாஜா பெர்பாடுவான் மடானி கிரேன் ஃபைனல் குவால சிலாங்கூர் எனும் தேர்தல் பரப்புரை நிகழ்வில் உரையாற்றுயில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.வாழ்க்கைச் செலவினமும், பண வீக்க விகிதமும் குறைவாக உள்ளது என்று கூறப்பட்டாலும் மக்களுக்கு எவ்வாறு சுமை ஏற்படுகிறது? அந்த சுமையை எவ்வாறு குறைக்க முடியும் முதலிய விரிவான ஆய்வுகளுக்கு பிறகு இந்த சிறப்பு நிதியை ஏற்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு நிதியை உருவாக்கும் திட்டம் தற்போது இறுதிக்கட்ட ஆய்வில் இருக்கும் பட்சத்தில் நல் ல ஆதாயத்தை ஈட்டக்கூடிய நிறுவனங்கள், தங்கள் ஆதாயத்தில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி அவற்றை வற்புறுத்த முடியாத நிலையில் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கு அரசாங்கமே முன்னின்று இந்த சிறப்பு நிதியை ஏற்படுத்தவிருப்பதாக பிரதமர் விளக்கினார்.

Related News

சொத்துப் பிரகடன வழக்கு: இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான குற்றச்சாட்டு ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு

260 மலேசியா ஏர்லைன்ஸ் விமானிகளுக்கும் கட்டாய போதைப் பொருள் பரிசோதனை: மலேசிய விமானப் போக்குவரத்து குழுமம் அதிரடி உத்தரவு

பச்சிளம் குழந்தையைக் கொலை செய்ததாக 19 வயது மாணவி மீது கொலைக் குற்றச்சாட்டு

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 Lenova Tablet கைக்கணினி வழங்கப்பட்டது

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா தற்காலிக விடுப்பு


