கோலாலம்பூர், மே.24-
அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள சாதனைமிக்க முன்னேற்றத்தை மலேசியா வரவேற்பதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட விவகாரங்களில் ஏற்பட்டுள்ள இந்த நேர்மறையான வளர்ச்சி, ஆசிய வட்டாரத்தில் நீடித்த அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிச் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தத் தூதரக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் பாஹ்ரென், எகிப்து, ஜோர்டான், ஒமான், பாகிஸ்தான், கட்டார், சவுதி அரேபியா, துருக்கியே, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை அவர் பாராட்டினார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பிராந்தியத்தின் பாதுகாப்பு நலன்களை உள்ளடக்கிய ஒரு சமாதான உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.








