Jun 6, 2026
Thisaigal NewsYouTube
65.5 மில்லியன் ரிங்கிட்  நிதி; 6 அதிரடித் திட்டங்கள்!" – இந்தியச் சமூகத்திற்காக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மெகா அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

65.5 மில்லியன் ரிங்கிட் நிதி; 6 அதிரடித் திட்டங்கள்!" – இந்தியச் சமூகத்திற்காக டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மெகா அறிவிப்பு

Share:

மலேசிய இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ரா, மனிதவள அமைச்சின் கீழ் ஒரு முழுமையான துறையாக தரம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியச் சமூகத்தின் சமூக-பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக 65.5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் 6 புதிய திட்டங்களை மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமைச்சரின் அறிவிப்பின்படி, 'செலிக் மடானி' திட்டத்தின் கீழ் B40 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பாலர் பள்ளி குழந்தைகளுக்கு தலா 2,530 ரிங்கிட் வரை ஆரம்பக் கல்வி மற்றும் காலை உணவு மானியம் வழங்கப்படவுள்ளது. மேலும், எஸ்.பி.எம் மற்றும் எஸ்.டி.பி.எம் பயிலும் 5 ஆயிரம் B40 மாணவர்களுக்கான 'கல்வி மடானி' இலவச டியூஷன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வரும் ஜூன் 5ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தை வலுப்படுத்த, B40 மற்றும் M40 பிரிவைச் சேர்ந்த 500 இந்திய தொழில்முனைவோருக்கு உயர்வு மடானி திட்டத்தின் கீழ் தலா 50 ஆயிரம் ரிங்கிட் வரை தொழில் மேம்பாட்டு மானியம் வழங்கப்படும். இது ஜூன் 29 ஆம் தேதி முதல் திறக்கப்படவிருக்கிறது என்பதையும் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார். அதே வேளையில், நாட்டின் 9 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் வாழும் 1.7 மில்லியன் இந்தியர்களைச் சென்றடையும் நோக்கில், நாடாளுமன்ற சேவை மையங்களுடன் இணைந்து 12 மில்லியன் ரிங்கிட் செலவில் சிறப்பு மக்கள் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் விவரித்தார்.

சுகாதாரத் துறையில், 'ஆரோக்கிய மடானி' திட்டத்தின் மூலம் 1,300 சிறுநீரக நோயாளிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் 5 ஆயிரம் ரிங்கிட் வரையிலான டயாலிசிஸ் சிகிச்சை மானியமும், நலிவடைந்த B40 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரிங்கிட் வரை 'துணை மடானி' அவசர நிதி உதவியும் வழங்கப்படவுள்ளது என்று டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

இந்த இரு திட்டங்களுக்கும் ஜூன் 5 முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், தகுதி வாய்ந்த மலேசிய இந்தியர்கள் அனைவரும் www.mitra.gov.my என்ற இணையத்தளத்தின் வழி இதற்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்