குவாந்தான், டிசம்பர்.01-
கடந்த நவம்பர் 28-ஆம் தேதி, கேமரன் மலை, தானா ராத்தாவில் உள்ள புஞ்சாக் அராபெல்லா அடுக்குமாடி குடியிருப்பின் பிளாக் C அருகே உள்ள மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு, தொடர்ச்சியான கனமழை காரணமாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட, பிளாக் சி-யின் 24 பிரிவுகளைச் சேர்ந்த 91 பேர் புஞ்சாக் அராபெல்லா ஹால் நிவாரண மையத்திற்கு அனுப்பப்பட்டதாக கேமரன் மலை மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவான JPBD தெரிவித்துள்ளது.
மொத்தம் 40 குடியிருப்பாளர்கள் ஏற்கனவே நிவாரண மையத்தில் உள்ள நிலையில், மேலும் 51 பேர் அருகிலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று விட்டதாக இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் JPBD தெரிவித்துள்ளது.








