கோலாலம்பூர், ஜாலான் எச்.எஸ்.லீ,யில் விற்றிருக்கும் ஸ்ரீ மகாமாரியம்மன் கோயிலின் தங்க விமான, வெள்ளி, பந்தன, அஷ்டபந்தன திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா மகா கும்பாபிஷேகம் நாளை ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.10 மணிக்கு மேல் பகல் 12.30 மணிக்குள் வெகுசிறப்பாக நடைபெறவிருக்கிறது.
இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று ஜுன் 24 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் கும்பாபிஷேகத் தினமான நாளை ஜுன் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களுக்கு இரவு 7.30 மணிக்கு மேல் கோயில் வளாகத்தில் தமிழகத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் புகழ் பாடகர் முத்துச்சிற்பி, பாடகர் செந்தில் தாஸ் மற்றும் உள்ளூர் பாடகரான ஈப்போவைச் சேர்ந்த யமுனா ஆறுமுகம் ஆகியோரின் இசைக் கச்சேரிகள் நடைபெறவிருக்கின்றன என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா அறிவித்துள்ளார்.
முன்னதாக, ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி, இரவு வரையில் மூல விக்கிரங்களுக்கு எண்ணெய் சாத்துதல் நிகழ்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்நிகழ்வுகளில் பொது மக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக்கொள்கிறார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


