Oct 9, 2026
Thisaigal NewsYouTube

தாமான் தாசேக் டானாவ் கோத்தா ஏரியில் ஆடவரின் சடலம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தாமான் தாசேக் டானாவ் கோத்தா ஏரியில் ஆடவரின் சடலம்

கோலாலம்பூர், ஜூன்.28-

கோலாலம்பூர், ஜாலான் ஸ்தாப்பாக், தாமான் தாசேக் டானாவ் கோத்தா ஏரியில் ஆடவர் ஒருவரின் சடலம் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று காலை 8 மணியளயில் அந்த ஏரிப் பூங்காவில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்கள், ஏரியில் சடலம் மிதப்பதைக் கண்டு போலீசுக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்தாப்பாக் தீயணைப்பு, மீட்புப் படை நிலையத்தைச் சேர்ந்த 7 வீரர்கள், கயிற்றின் மூலம் அந்த சடலத்தைக் கரைக்கு இழுத்து, ஸ்ரெச்சரின் உதவியுடன் மேலே கொண்டு வந்தனர் என்று அதன் செயலாக்க அதிகாரி ஸுல்கிஃப்லி அப்துல் மாலிக் தெரிவித்தார்.

சடலத்தை மீட்பதில் அவர்கள் 40 நிமிடம் எடுத்துக் கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →