Oct 18, 2026
Thisaigal NewsYouTube

30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு போதுமான சேமிப்பு இல்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
30 வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு போதுமான சேமிப்பு இல்லை

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

முப்பது வயதுக்கும் கீழ்ப்பட்ட 90 விழுக்காடு EPF சந்தாதாரர்கள், தங்களின் அந்திம காலத்தில் தேவைப்படக்கூடிய அளவுக்கு போதுமான சேமிப்பைக் கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் காலத்தில் அனுமதிக்கப்பட்ட நிதி மீட்பு நடவடிக்கைகள் இ.பி.எஃப். சந்தாதாரர்களின் நிதி சேமிப்பு குறைந்ததற்கு பொதுவான காரணமாக விளங்குவதாக கஸானா ஆய்வுக் கழகம் கூறுகிறது.

பொதுச் சேவைத் துறை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற துறைகளை தவிர்த்து நாட்டிலுள்ள மனித வளத்தில் 60 விழுக்காட்டினரை இ.பி.எஃப். வாரியம் பிரதிநிதிப்பதாக அக்கழகத்தை மேற்கோள் காட்டி உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐம்பத்தைந்து வயதை அடையும் போது 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி சேமிப்பைக் கொண்டிருப்பதற்கு ஏதுவாக இ.பி.எஃப். சந்தாதாரர்கள் தங்களின் 30 ஆவது வயதில் 35,000 வெள்ளியை சேமிப்பாக கொண்டிருக்க வேண்டும் என்று அந்த வாரியம் மதிப்பிடுகிறது.

முப்பது வயதுக்கும் குறைவான முதல் பத்து விழுக்காட்டினர் மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட 35,000 வெள்ளிக்கும் அதிகமான சேமிப்பைக் கொண்டுள்ளனர் என்று 2019 முதல் 2022 வரை ஊழியர் சேம நிதி வாரியமான EPF சந்தா தரவுகள் காட்டுகின்றன

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்