Mar 23, 2026
Thisaigal NewsYouTube
மின்சார தூணை மோதி விபத்து; மூன்று நண்பர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

மின்சார தூணை மோதி விபத்து; மூன்று நண்பர்கள் உயிரிழந்தனர்

Share:

க்ளுவாங், ஜுன் 28-

ஜோகூர், சிம்பாங் ரெங்கம், ஜலான் ரெங்கமில் 4 நண்பர்கள் பயணித்த புரோட்டான் வீரா வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மின்சார தூணை மோதி விபத்துக்குள்ளானதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

21 வயதுடைய அம்மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த வேளை, கடும் காயங்களுக்கு இலக்கான எஞ்சிய நபர் என்செ' பெசார் ஹஜ்ஜா கல்சோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

நேற்றிரவு மணி 11.45 அளவில் தகவல் பெறப்பட்டதை அடுத்து, ரெங்கம் தீயணைப்பு மீட்பு நிலையத்திலிருந்து 14 வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

விபத்துக்குள்ளான வாகனத்தில் சிக்குண்டிருந்த அந்நால்வரையும் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி வெளியே கொண்டு வந்தனர்.

விபத்தில் சிக்குண்டவர்களின் உடல்கள் நசுங்கியிருந்தால், அந்த வாகனத்தை செலுத்தியது யார் என்பது உறுதிபடுத்த முடியவில்லை என ரெங்கம் தீயணைப்பு துறை தரப்பு கூறியது.

Related News