Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சவால் நிறைந்த காலநிலை: தயாராக இருக்கும் மலேசிய தீயணைப்புத் துறை!
தற்போதைய செய்திகள்

சவால் நிறைந்த காலநிலை: தயாராக இருக்கும் மலேசிய தீயணைப்புத் துறை!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

மலேசியாவின் வானிலை தற்போது கணிக்க முடியாதபடி மாறி வருகிறது. சில இடங்களில் கடும் வறட்சி நிலவ, இன்னும் சில இடங்களில் திடீர் மழையும், புயலும் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இத்தகைய எதிர்பாராத சூழலைச் சமாளிக்க, மலேசிய தீயணைப்பு – மீட்புப் படை அனைத்து அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் தயார் நிலையில் இருக்கும்படி அவசரக் கட்டளை பிறப்பித்துள்ளது.

குறிப்பாக புயல் காரணமாக ஏற்படும் மரங்கள் விழுதல் போன்ற விபத்துகளை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக மலேசிய தீயணைப்பு – மீட்புப் படையின் தலைமை இயக்குநர் டத்தோ ஶ்ரீ நோர் ஹிஷாம் முகமட் தெரிவித்தார். 'போர் வீரர்கள்' என அழைக்கப்படும் தீயணைப்பு வீரர்கள், எந்த நேரத்திலும் மக்களுக்கு உதவ தயாராக இருக்கின்றனர். இந்த ஆபத்து நிறைந்த காலநிலை குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

Related News