கோலாலம்பூர், ஆகஸ்ட்.28-
கோலாலம்பூர் மாநகரில் நேற்று முன்தினம் போலீசார் மேற்கொண்ட மிகப் பெரிய சோதனை நடவடிக்கையில் மோசடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படும் 400 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.
எனினும் இந்த கைது நடவடிக்கை தொடர்பான மேல் விபரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். விரைவில் கோலாலம்பூர் போலீஸ் தலைமையத்தில் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் இது குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் விளக்கினார்.








