கோத்தா திங்கி, செப்டம்பர்.30-
லோரி ஒன்றினால் மோதப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், சம்பவ இடத்திலேயே மாண்டார். இந்தச் சம்பபம் இன்று காலை 11.50 மணியளவில் ஜோகூர், ஜாலான் ஜோகூர் பாரு – மெர்சிங் சாலையின் 41.5 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
ஹினோ ரக லோரியினால் மோதப்பட்ட 47 வயது மதிக்கத்தக்க ஒரு அந்நிய நாட்டவரான மோட்டார் சைக்கிளோட்டி கடும் காயங்களுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் யுசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.








