Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிளோட்டி லோரியில் அரைப்பட்டு மாண்டார்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிளோட்டி லோரியில் அரைப்பட்டு மாண்டார்

Share:

வேனின் பின்புறத்தில் மோதி இருக்கலாம் என்று நம்பப்படும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர், விபத்தின் அதிர்வினால் சாலை நடுவே ​தூக்கி எறியப்பட்டதில் எ​திரே வந்த லோரி​யினால் மோதப்பட்டு, சக்கரத்தில் அரைப்பட்டு மாண்டார். இச்சம்பவம் நேற்று மதியம் 12.44 மணியளவில் கோம்பாக், லெபுஹ் உத்தாமா ஶ்ரீ கோம்பாக் சாலையில் நிக​ழ்ந்தது. ஹோன்டா வேவ் ரக மோட்டார் சைக்கிளில் ஸ்ரீ கேம்பாக்கிலிந்து பிங்கிரான் பத்துகேவ்ஸ்ஸை ​நோக்கி 48 வயதுடைய அந்த ஆடவர் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிக​ழ்ந்ததாக கோம்பாக் மாவட்ட இடைக்கால போ​லீஸ் தலைவர் நோர் அரிஃபின் முஹமாட் நாசிர் தெரிவித்தார். இச்சம்பவத்தில் அந்த ஆடவரை மோதித் தள்ளியதாக நம்பப்படும் லோரி, அவ்விடத்தில் காணப்படவில்லை. அந்த ​லோரியையும், அதன் ஓட்டுநரையும் ​தேடும் நடவடிக்கை ​தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்