Oct 16, 2026
Thisaigal NewsYouTube

டிமேன்சியா நோயினால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஆசிரியர் எங்கே?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
டிமேன்சியா நோயினால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஆசிரியர் எங்கே?

பாங்கி, நவ. 15-


டிமேன்சியா எனப்படும் நினைவாற்றல் குறைபாட்டினால் அவதியுற்று வரும் முன்னாள் ஆசிரியர் ஒருவர், வீட்டை விட்டு சென்றவர், வீடு திரும்பாதது குறித்து அச்சம் கொண்டுள்ள அவரின் குடும்பத்தினர், புகார் அளித்துள்ளனர்.

பண்டார் பாரு பாங்கியில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த திங்கட்கிழமை பண்டார் பாரு, அரசு சுகாதார கிளினிக்கிற்கு சென்ற ஒரு முன்னாள் ஆசிரியராக 84 வயது சுப்பிரமணியம் கோபால், அன்றைய தினம் மாலை 5 முதல் காணவில்லை என்று மகன் எஸ். தேவநாதன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகக்கடைசியாக அவரை பார்த்தது, வீட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுகாதார கிளினிக் ஆகும். அவரை தேடும் முயற்சியில் குடும்ப உறுப்பினர்களும், அண்டை வீட்டுக்காரர்களும் ஈடுபட்டும், இதுவரை அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை என்று மகன் தேவநாதன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

52 கிலோ எடையும் 173 செண்டிமீட்டர் உயரும் கொண்ட தமது தந்தையை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடம் தெரிந்தவர்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு தேவநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →