Mar 27, 2026
Thisaigal NewsYouTube
மாற்றுத்திறனாளிப் பெண் பாலியல் வன்கொடுமை:  பாதுகாவலருக்கு 10 ஆண்டுகள் சிறை
தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிப் பெண் பாலியல் வன்கொடுமை: பாதுகாவலருக்கு 10 ஆண்டுகள் சிறை

Share:

மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட பாதுகாவலர் ஒருவருக்கு ஜோகூர்பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்தது.

39 வயதான ஆர். சிவநேசன் எனும் அந்த நபர், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி இரவு 11.50 மணியளவில், இஸ்கந்தர் புத்திரி மாவட்டத்தின் ஸ்கூடாய் பகுதியில் காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் கற்றல் குறைபாடுடையவர் 29 வயது மதிக்கத்தக்க பெண்ணை வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் நோர் பாடிலா ஜொஹானுடின் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதால், அந்தப் பெண்ணுக்கும் பால்வினை நோய்கள் பரவும் அபாயத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார்," எனக் கூறி கடுமையான தண்டனையை கோரினார்.

Related News