Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ஆறு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

ஆறு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன

Share:

வரும் சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் பேரங்காடி மையம் ஒன்றின் முன்புறம் “மலேசியாவை காப்பாற்றுங்கள்” பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக கோலாலம்பூர் போலீசார் 6 புகார்களை பெற்றுள்ளதாக மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்.

இதன் தொடர்பில் பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக விசாரணை அறிக்கையை போலீசார் திறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகார்கள் யாவும் தொடர்பு, பல்லூடகச் சட்டம் 233 ஆவது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த புகார்கள் தொடர்பாக பாசீர் மாசிர் எம்.பி. அகமட்ஃபத்லி ஷாரி, கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் ஹில்மேன் ஐதாம் ஆகியோரை விசாரணைக்காக நாளை புதன்கிழமை டாங் வாங்கி மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக டத்தோ அல்லாவுதீன் தெரிவித்தார்.

Related News