Mar 29, 2026
Thisaigal NewsYouTube
பிள்ளையைக் கொடுமைப்படுத்தியதாகத் தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பிள்ளையைக் கொடுமைப்படுத்தியதாகத் தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

பாலிக் பூலாவ், மே.27-

தங்களது 12 வயது மகளைக் கொடுமைப்படுத்தி, உடல் ரீதியாகக் காயங்கள் விளைவித்ததாக ஒரு தம்பதியர் பினாங்கு, பாலிக் பூலாவ் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

47 வயது சியூ கோக் வான் மற்றும் 49 வயதுடைய அவரின் மனைவி மாக் வாய் பெங் ஆகியோர் நீதிபதி அஹ்ஸால் பாஃரிஸ் Ahzal Fariz முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

கடந்த மே 18 ஆம் தேதி காலை 7.30 மணியளவில் பாயான் லெப்பாஸ் அருகில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் அந்த தம்பதியர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்தத் தம்பதியர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.

Related News