Oct 9, 2026
Thisaigal NewsYouTube

புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தின் புதிய சிஐடி இயக்குநராக டத்தோ குமார் நியமனம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புக்கிட் அமான் போலீஸ் தலைமையத்தின் புதிய சிஐடி இயக்குநராக டத்தோ குமார் நியமனம்

கோலாலம்பூர், ஜூன்.28-

அரச மலேசிய போலீஸ் படையின் புக்கிட் அமான் தலைமையகத்தின் சிஐடி இயக்குநரான ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஐடி இயக்குராக இருந்த டத்தோ ஶ்ரீ முகமட் ஷுஹலி முகமட் ஸையினுக்கு பதிலாக டத்தோ குமார் நியமிக்கப்பட்டுள்ளார். புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் குற்றச்செயல் தடுப்புப் பிரிவின் இயக்குநராக டத்தோ குமார் நியமிக்கப்பட்டது மூலம் இந்திய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சிஐடி இயக்குநர் பதவிக்கு உயர்த்தப்பட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும்.

டத்தோ குமாரின் சிஜடி இயக்குநர் பதவி உயர்வு, வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. இவர் வரும் 2027 ஆம் ஆண்டு ஜுன் 20 ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →