டெலிக்கோம் மலேசியாவிற்கு சொந்தமான கேபல் கம்பிகளை களவாடிய கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக நம்பப்படும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளர். அவர்களில் நால்வர் அமலாக்க அதிகாரிகள் ஆவர் என்று தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கும்பல், டெலிக்கோம் மலேசியாவின் கேபல் கம்பிகளை களவாடும் நேரத்தில் அந்த அமலாக்க அதிகாரிகள், அவ்விடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியதாக தெரியவந்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா, தாமான் கனகாபுரத்தில் நடந்த கேபல் கம்பி களவாடல் தொடர்பான புகார் குறித்து ஆராய்ந்த போது அரசாங்கத்தில் பணியாற்றும் அமலாக்க அதிகாரிகளே திருடர்களுக்கு துணை நின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் பிடிபட்டதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது இன்று உறுதிபடுத்தியுள்ளார்.








