Mar 29, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ரஃபிஸி ரம்லி
தற்போதைய செய்திகள்

அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ரஃபிஸி ரம்லி

Share:

கோலாலம்பூர், மே.28-

தாம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, இன்று தமது பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிகேஆர் கட்சியின் பேராளர்களின் ஆதரவுடன் முன்பு துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டேன். அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தேர்தலில் பேராளர்களின் ஆதரவை இழந்தேன்.

பேராளர்களின் ஆதரவை இழக்கக்கூடிய ஒருவர், அந்த கட்சி வழங்கிய அரசாங்கப் பதவியில் அமர்ந்து கொண்டு இருப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. அது என் தன்மானத்தை உரசிப் பார்ப்பது போல் உள்ளது. பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கி விட்டேன். அலுவலகத்தைக் காலி செய்கிறேன் என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டுள்ளார்.

தம்முடைய விடுமுறைக் காலம் ஜுன் 17 ஆம் தேதி வரை இருப்பதாக குறிப்பிட்ட ரஃபிஸி ரம்லி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கி விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி