Sep 29, 2026
Thisaigal NewsYouTube
பசுமை எரிசக்திக்கு நிதியுதவி: நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வு குறித்து பேங்க் நெகாரா பரிசீலனை
தற்போதைய செய்திகள்

பசுமை எரிசக்திக்கு நிதியுதவி: நிதி நிறுவனங்களுக்கு கூடுதல் தளர்வு குறித்து பேங்க் நெகாரா பரிசீலனை

Share:

எரிசக்தி மாற்றத்தை ஆதரிக்கும் வகையில், நிதி நிறுவனங்கள் பொறுப்புடன் அதிக ஆபத்தை ஏற்க அனுமதிக்கும் கூடுதல் தளர்வுகளை வழங்குவது குறித்து பேங்க் நெகாரா மலேசியா பரிசீலித்து வருவதாக அதன் ஆளுநர் அப்துல் ரஷீட் ஃகாஃபோர் தெரிவித்தார்.

ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆபத்து வரம்புக்குள் நிதி நிறுவனங்கள் அதிக ஆபத்தை ஏற்கும் வகையில் விதிமுறைகளை மாற்றியமைப்பது குறித்து மத்திய வங்கி ஆய்வு செய்து வருவதாக அவர் கூறினார்.

ஆபத்துகள் முறையாகப் புரிந்து கொள்ளப்பட்டு, மதிப்பிடப்பட்டு, நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கான நிதித் திட்டமிடலை எளிதாக்குவதுடன், அவற்றுக்கு ஆதரவாக ஒழுங்குமுறை மற்றும் கண்காணிப்பு நடைமுறைகளிலும் மாற்றங்களை மேற்கொள்ள பேங்க் நெகாரா உறுதியாக உள்ளதாக அப்துல் ரஷீட் ஃகாஃபோர் தெரிவித்தார்.

Related News