Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பங்கோர் விபத்து: ‘ஆம்புலன்ஸ் தாமதம்’ என்பது அப்பட்டமான பொய் - டத்தோ அ.சிவநேசன் கடும் எச்சரிக்கை

Share:

பங்கோர் தீவில் நிகழ்ந்த சாலை விபத்தில் பல் மருத்துவர் டாக்டர் பவித்ரா மோகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் "ஆம்புலன்ஸ் தாமதம்" என்ற குற்றச்சாட்டை பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

ஆம்புலன்ஸ் வர இரண்டு மணி நேரம் தாமதமானதாகக் கூறப்படும் தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என டத்தோ சிவநேசன் விளக்கமளித்தார். அதிகாரப்பூர்வ பதிவுகளின்படி, காலை 10.57 மணிக்கு அவசர அழைப்பு பெறப்பட்டு, 11.10 மணிக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டு, அடுத்த இரண்டே நிமிடங்களில் அதாவது 11.12 மணிக்கு சம்பவ இடத்தை சென்றடைந்துவிட்டது.

"மருத்துவக் குழுவினர் விரைவாகச் செயல்பட்ட போதிலும், அங்கிருந்த நபர் ஒருவர் ஊழியர்களை மிரட்டி, அவதூறாகப் பேசியுள்ளார். இது தொடர்பாகப் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது," என்று ஈப்போவில் பேரா மாநில அரசு கட்டட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ சிவநேசன் விவரித்தார்.

பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த டத்தோ சிவநேசன் , விசாரணையை விரைவுபடுத்த மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவரைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது பேரா மாநில துணை சபாநாயகர்ஜென்னி சோய் டிசி ஜென் மற்றும் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு