கடந்த வியாக்கிழமை அன்று ஜாலான் பத்து நீலாம், பண்டார் புக்கிட் திங்கி எனும் இடத்தில் 15 15 கார்களின் கண்ணாடிகளை உடைத்ததுடன் கார் போனட்டுகளை எரித்த குற்றச் செயலுக்காக 53 வயது ஆடவர் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த ஆடவரின் தகாத செயலால் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு 15,000 வெள்ளி அளவில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாக தெற்கு கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஸ்னர் சா ஹூங் பாங் தெரிவித்தார்.
அந்த வேலையில்லாத 53 வயது ஆடவரின் குற்றச்செயல்களை விசாரிக்கையில், இதற்கு முன்பு போதை பொருள் தொடர்பான 6 குற்றச்செயல்கள் அவர் மீது பதிவாகி உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.








