Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சுதந்திர தின ஒத்திகையைப் பிரதமர் நேரில் பார்வையிட்டார்
தற்போதைய செய்திகள்

சுதந்திர தின ஒத்திகையைப் பிரதமர் நேரில் பார்வையிட்டார்

Share:

புத்ராஜெயா, ஆகஸ்ட்.29-

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மலேசியா 68 ஆவது சுதந்திரத் தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடவிருக்கிறது. இதனையொட்டி, சுதந்திர தின கொண்டாட்டத்தை வரவேற்கும் தளமான டத்தாரான் புத்ராஜெயாவில் கடந்த 5 தினங்களாக அணிவகுப்பு ஒத்திகை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

அரசாங்க இலாகாக்கள், ஏஜென்சிகள், தனியார் துறையினர், தொண்டுப் படைகள், தன்னார்வலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இன்று காலையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்வில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு கடைசி ஏற்பாடுகளை நேரடியாகக் கவனித்தார்.

பிரதமரின் வருகையானது, பங்கேற்பாளர்கள் மட்டுமின்றி அரங்கில் குழுமியிருந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.

மாணவர்களை ஜாலூர் கெமிலாங் கொடியை அசைத்தவாறு பிரதமரை வரவேற்றனர். காலை 8.38 மணிக்கு பிரதமர், புத்ராஜெயா சதுக்கத்தை வந்தடைந்தார். அவருடன் தொடர்புத்துறை அமைச்சரும், 2025 ஆம் ஆண்டு சுதந்திரத் தின கொண்டாட்ட விழாக் குழுத் தலைவருமான டத்தோ ஃபாமி ஃபாட்சீல் காணப்பட்டார்.

Related News