புத்ராஜெயா, ஜூலை.21-
நாளை செவ்வாய்க்கிழமை அல்லது புதன்கிழமை மக்களுக்கு இன்ப அதிர்ச்சியைத் தரக்கூடிய முக்கிய அறிவிப்பு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக இன்று அறிவித்துள்ளார்.
அது என்ன இன்ப அதிர்ச்சி செய்தி என்பதை பிரதமர் விளக்கவில்லை.
இன்று புத்ராஜெயாவில் பிரதமர் துறையின் பணியாளர்களுடன் மாதாந்திர பேரணி நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
மக்களின் கோரிக்கையை நிறைவு செய்வதற்கும், அது குறித்து பரிசீலனை செய்வதற்கும் பிரதமர் என்ற முறையில் தமக்கு சற்று கால அவகாசம் வழங்கும்படி அன்வார் கேட்டுக் கொண்டார்.








