ஜெர்தே, அக்டோபர்.22-
திரங்கானு மாநிலத்தில் இவ்வாண்டில் பறிமுதல் செய்யப்பட்ட 12 வெளிநாட்டு மீன் பிடிப் படகுகள் கடலில் செயற்கைப் பாறைகளாக மாற்றப்பட்டுள்ளன.
சுமார் 1.7 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள இப்படகுகள், கடல்வாழ் உயிரினங்களுக்கு புதிய வாழ்விடங்களாக மாற்றப்பட்டதாக மலேசியக் கடலோர பாதுகாப்புப் படை இயக்குநர் கேப்டன் ஹமிலுடின் சே அவாங் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், சுற்றுச் சூழலைப் பாதிக்காத வகையில், அவை பாரம்பரிய முறையிலேயே செயற்கைப் பாறைகளாக மாற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை பல்வேறு அரசாங்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








