செமினி, ஆகஸ்ட்.16-
சிலாங்கூர், செமினி, ஜாலான் ஏகோஹிலில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில் 18 மாடியில் வீற்றிருக்கும் ஒரு வீட்டில் ஏற்பட்ட தீயில் கிட்டத்தட்ட அழிந்தது.
இன்று பிற்பகல் 3.10 மணியளவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் குறித்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து செமினி தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
தீ மற்ற வீடுகளுக்குப் பரவாமல் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட தீயணைப்பு பணி பிற்பகல் 3.28 மணிக்கு நிறைவு பெற்று தீ முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.
அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








