Oct 17, 2026
Thisaigal NewsYouTube

கேபே-யை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கேபே-யை மூடும்படி சுகாதாரத்துறை உத்தரவு

கோலாலம்பூர், நவ. 14-


நாடாளுமன்றத்தின் பிரதான கட்டத்தில் செயல்பட்டு வரும் கேபே உணவகத்தில் சுத்தம் பராமரிக்கப்படாததைத் தொடர்ந்து அந்த உணவகத்தை வரும் நவம்பர் 26 ஆம் தேதி வரை 2 வாரத்திற்கு மூடும்படி கோலாலம்பூர் சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிக அசுத்தமாக காணப்பட்டுள்ள அந்த கேபே,-வின் சூழல், பொது மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்த வல்லதாக இருக்கிறது என்று கூறி, 1983 ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் கீழ் அந்த கேபே-வை மூடுவதற்கான நோட்டீஸை சுகாதாரத்துறை சார்வு செய்துள்ளது.

நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதான கட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு கேபே உணவகம், அசுத்தமாக காணப்பட்டது குறித்து மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ அப்துல் ஜோஹாரியிடம் கருத்து கேட்ட போது, உண்மை நிலவரத்தை அறிவதற்கு இதில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →