Oct 9, 2026
Thisaigal NewsYouTube

15 உப்சி மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
15 உப்சி மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து குறித்த விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது

பட்டர்வொர்த், ஜூன்.20-

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பேரா, கெரிக்கில் 15 உப்சி மாணவர்களின் உயிரைப் பலி கொண்ட பேருந்து விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை, பேருந்து நிறுவன உரிமையாளர் மீது வழக்குத் தொடர துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பேருந்து ஓட்டுநரையும் பேருந்துக் குத்தகை நிறுவனத்தையும் உள்ளடக்கிய இரண்டு விசாரணை அறிக்கைகள் இறுதிச் செய்யப்பட்டு வருவதாகக் சாலை போக்குவரத்துத் துறையான ஜேபிஜேவின் இயக்குநர் டத்தோ ஏடி ஃபட்லி ரம்லி கூறினார்.

பேருந்தைச் செலுத்த அனுமதி மூன்றாம் தரப்பினருக்குக் குத்தகைக்கு விடப்பட்டதாகவும், ஜிபிஎஸ் இயக்கப்படவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அனைத்து அனுமதிகளும் உரிமங்களும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →