சிலாங்கூர்,ஆ௧ஸ்ட் 04-
சிலாங்கூர், KAJANG, SEMENYIH, KAMPUNG PASIR-இல் உள்ள வீடொன்றில், கடந்த புதன்கிழமை நிகழ்ந்த கொள்ளை சம்பவத்திற்குத் தொடர்பான மற்றொரு நபருக்குப் போலிஸ் வலைவீசியுள்ளது.
அந்நபரின் அடையாளங்கள் விசாரணையில் கண்டறியப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலிஸ் தலைவர் DATUK HUSSEIN OMAR KHAN தெரிவித்துள்ளார்.
அதோடு, அவராக முன்வந்து சரணடையாவிட்டாலும் நிச்சயமாக போலிஸிடம் அவர் பிடிப்படுவார் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுப்புக்காவலிடப்பட்டிருப்பதாக DATUK HUSSEIN OMAR KHAN கூறினார்.








