மலாக்கா, ஜனவரி.13-
மலாக்காவிலுள்ள தங்கும் விடுதி ஒன்று ‘ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு’ உகந்ததாக விளம்பரப்படுத்தியுள்ளது குறித்து விசாரணை நடத்த மாநில அரசாங்கம், மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM-க்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிக்கையானது வெளியிடப்படும் என கல்வி, உயர்கல்வி மற்றும் சமய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ரஹ்மாட் மாரிமான் தெரிவித்துள்ளார்.
தங்கும் விடுதிகள் பல வளர்ப்புப் பிராணிகளுக்கு உகந்ததாக விளம்பரப்படுத்துவது போல், சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியானது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு உகந்ததாக விளம்பரப்படுத்தியுள்ளதாக அண்மையில் சமூக ஊடகங்களில் எழுந்த சர்ச்சையையடுத்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் இது குறித்து கலவையான எதிர்வினைகள் எழுந்திருப்பதுடன், மலாக்கா மாநிலத்தில் ஓர்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோரை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வது போல் இது போன்ற விளம்பரங்கள் தோன்றுவதாகப் பலர் கவலை தெரிவித்துள்ளனர்.








